search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் கைது"

    • இளம்பெண் வேலை முடிந்ததும் குரும்பபாளையத்தில் இருந்து அன்னூர் செல்வதற்காக அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் ஏறினார்.
    • ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, டிரைவரை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண்.

    இவர் தனியார் மருத்துவ கல்லூரியில் பிசியோதெரபி துறையில் முதன்மை செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இளம்பெண் தினமும் தான் வேலை பார்க்கும் கல்லூரிக்கு பஸ்சிலேயே பயணித்து செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று காலை இளம்பெண் வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் மாலையில் வேலை முடிந்ததும் குரும்பபாளையத்தில் இருந்து அன்னூர் செல்வதற்காக அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் ஏறினார்.

    அப்போது பஸ்சை ஓட்டிச்சென்ற சிறுமுகையை சேர்ந்த 35 வயது டிரைவர் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் பஸ் அன்னூருக்கு சென்றதும், பஸ்சை விட்டு இறங்கி நேராக அன்னூர் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, டிரைவரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் இரண்டு பிரிவாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ஸ்ரீதரிடம் டிரைவராக இருந்த முக்கிய கூட்டாளியான தினேஷ் என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை சேர்ந்த மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் இறந்த பின்னர் அவரது கூட்டாளிகள் இரண்டு பிரிவாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. இது போலீசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஸ்ரீதரிடம் டிரைவராக இருந்த முக்கிய கூட்டாளியான தினேஷ் என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த ரவுடி தினேசை அதிரடியாக கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மினி ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • ஆட்டோவுடன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், சக்திவேலை கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தர்மபுரி சாலையில் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த, மினி ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தலா, 50 கிலோவில், 14 மூட்டைகளில், 700 கிலோ அரிசி இருந்தது. விசாரணையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா செட்டி அல்லி அடுத்த கம்மாளப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது45), என்பதும் தெரியவந்தது.

    அவர் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு வாங்கி, அதை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து ஆட்டோவுடன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், சக்திவேலை கைது செய்தனர்.

    • சாலை மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் பேச்சுவார்த்தையடுத்து கலைந்து சென்றனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த வர் அயாஸ் அஹமத். இவரு டைய மகன் அப்ரார் அஹ மத் (வயது 19). தனியார் தொழிற்சாலையில் பணி யாற்றி வந்தார்.

    நேற்று காலை வழக்கம் போல மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்று கொண் டிருந்தார். மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் மோட்டார் சைக் கிள் மீது அந்த வழியாக வந்த டிராக்டர் மோதி விபத்துக் குள்ளானது. இதில் அப்ரார் அஹமதுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர்.

    அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பிறகு நீங்கள் மற்றும் பகுதி மக்கள் உடலை எடுக்க விடாமல் விபத்து ஏற்படுத்திய டாக்டர் டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    அதைத்தொடர்ந்து வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    அதன்பிறகு உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

    மறியல் போராட்டம் கார ணமாக சுமார் 2 மணி நேரத் துக்கும் மேலாக வாணியம்பா டியில் இருந்து ஆந்திரா செல் லும் சாலையில் போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்துவிபத்தை ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்த துடன், டிரைவர் அஜீத் (26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வசந்தகுமார் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்துள்ளார்.
    • கருணா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வசந்தை சரமாரியாக குத்தினார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கொக்குபாளையத்தை சேர்ந்தவர் வசந்த் என்கிற வசந்தகுமார் (வயது 18). இவர் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்துள்ளார். அதே ஊரை சேர்ந்த கருணா (28), வசந்தை மது குடிக்க அழைத்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று மது பாட்டில்கள் வாங்கிக்கொண்டு விழுப்புரம் அருகே உள்ள திருப்பாச்சனூருக்கு சென்று மதுஅருந்தினர். போதையில் லாரி டிரைவரான கருணா அந்த வழியே சென்றவர்களிடம் வம்புச் சண்டையிழுத்தார்.

    இதில் கருணாவை சமாதானப்படுத்த வசந்த் முயற்சித்தார். கருணா சமாதானம் ஆகாததால் அவரை அங்கேயே விட்டுவிட்டு, கருணாவின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வசந்த் வீடு திரும்பினார். இதனால் ஆத்திரமடைந்த லாரி டிரைவர் கருணா வசந்த் வீட்டுக்கு வந்தார். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வசந்தை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த வசந்த் பண்ருட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்தத புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரிடிரைவர் கருணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • வாக்குவாதத்தை தவிர்ப்பதற்காக மனைவி வீட்டுக்கு வெளியே செல்ல முயன்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள படந்தாள் வைகோ நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 33) சாத்தூர் அரசு பஸ் டெப்போவில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அங்காள ஈஸ்வரி (வயது 27). இவர் வீட்டின் அருகே பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர்களுக்கு திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகிறது 2 மகள்கள் உள்ளனர். மனைவி அங்காள ஈஸ்வரி நடத்தையில் சந்தேகம் அடைந்த கருப்பசாமி அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. பெரியவர்கள் பேசி சமாதானப்படுத்தி வைத்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அங்காள ஈஸ்வரி சமையல் வேலைகளை முடித்துவிட்டு செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வேறு அறையில் இருந்த கருப்பசாமி சமையலறைக்கு வந்து மனைவியை ஆபாசமாக பேசி திட்டி உள்ளார். வாக்குவாதத்தை தவிர்ப்பதற்காக மனைவி வீட்டுக்கு வெளியே செல்ல முயன்றார். அப்போது அவரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டிய கருப்பசாமி அங்கிருந்து அரிவாளை எடுத்து அவரை வெட்டினார். இதில் அங்காள ஈஸ்வரியின் மனுக்கட்டு முழங்கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

    இதனால் அவர் அலறிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி உள்ளார். ஆனால் கருப்பசாமி அரிவாளுடன் அவரை துரத்திச் சென்றார் அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்களை பார்த்ததும் கருப்பசாமி வீட்டு நூல் சென்று விட்டார். அக்கம் பக்கத்தினர் அங்காள ஈஸ்வரியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் அங்காள ஈஸ்வரி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

    • காரில் பணத்துடன் தப்பி செல்லும் டிரைவர் குறித்து மற்ற ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    அண்ணாநகரில் பிரபல தனியார் நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு சேத்துப்பட்டை சேர்ந்த பரத் என்பவர் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஆவடி, அம்பத்தூர் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் பணத்தை வசூல் செய்தனர். அப்போது வசூல் செய்த பணத்தை காரில் வைத்து இருந்தனர். காரில் டிரைவராக கொடுங்கையூரை சேர்ந்த அமீர் பாஷா என்பவர் இருந்தார்.

    அம்பத்தூரில் உள்ள ஒருநிறுவனத்தில் ஊழியர்கள் வசூல் செய்ய சென்றபோது பணம் இருந்த காரை திடீரென டிரைவர் அமீர் பாஷா ஓட்டி தப்பி சென்று விட்டார். அந்த காரில் ரூ.35½ லட்சம் ரொக்கம் இருந்தது. இதனால் வசூலில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்த காரில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டு இருந்தது. அதனை வைத்து பார்த்த போது பணத்துடன் கார், மாதவரம் நோக்கி செல்வது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து காரில் பணத்துடன் தப்பி செல்லும் டிரைவர் குறித்து மற்ற ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் விரைந்து சென்று மாதவரம் மண்டல அலுவலகம் முன்பு காரை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த ரூ.35½ லட்சத்தையும் மீட்டனர்.

    இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் உதவி மேலாளர் பரத் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் பணத்துடன் தப்ப முயன்ற டிரைவர் அமீர்பாஷாவை கைது செய்தனர். காரில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருந்ததால் அவர் உடனடியாக சிக்கிக்கொண்டார். அவருடன் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குட்கா கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது.
    • காரையும், ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள குட்காவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் போலீசார் கக்கனூர் சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழீயாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் காரில் 238 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், பான்பராக், பான்மசாலா உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அதை கடத்தி வந்ததாக கிருஷ்ணகிரி அருகே உள்ள வராகசந்திரத்தைச் சேர்ந்த சின்னராஜ் (28) என்பவரை கைது செய்தனர்.

    விசாரணையில் அந்த குட்கா கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து காரையும், ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள குட்காவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • தூத்துக்குடியில் இருந்து கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.
    • தப்பி ஓடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. அதனை தடுக்க கடலோர காவல்படையினரும், போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், தூத்துக்குடி நகர உட்கோட்ட சிறப்பு படை போலீஸ் தலைமை காவலர் மாணிக்கராஜ் மற்றும் மகாலிங்கம், சாமுவேல், செந்தில் உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திரேஸ்புரம் கடற்கரையில் போலீசாரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த மினிலாரியில் இருந்து சிலர் தப்பி ஓடினர். எனினும் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் அவர் மினிலாரியை ஓட்டிவந்த தூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த சார்லஸ் (வயது41) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் மினிலாரியை சோதனையிட்டனர். அதில் 49 மூட்டைகளில் 2,500 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவைகள் தூத்துக்குடியில் இருந்த இலங்கைக்கு கடத்த முயற்சித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சார்லசை கைது செய்தனர்.

    மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து. பீடி இலைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதில் தொடர்புடையவர்கள் யார்- யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடியவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • டிரைவர் மாணவியின் வாயில் துணியை வைத்து அழுத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
    • கழிவறைக்கு சென்ற தங்களது மகள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் தனது மகளை தேடி வெளியே சென்றார்.

    கோவை:

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி.

    இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 11.30 மணியளவில் மாணவி வீட்டின் வெளியே உள்ள கழிப்பறைக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார்.

    அப்போது அருகே உள்ள வீட்டில் வசித்து வரும் டிரைவரான முபாரக்(வயது27) என்பவர் மாணவியை அவரது வீட்டிற்குள் தூக்கி சென்றார். பின்னர் டிரைவர் மாணவியின் வாயில் துணியை வைத்து அழுத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    கழிவறைக்கு சென்ற தங்களது மகள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் தனது மகளை தேடி வெளியே சென்றார்.

    அப்போது பக்கத்து வீட்டில் இருந்து தனது மகளின் முனகல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் கதவை தள்ளி உள்ளே சென்ற போது வாலிபர், மாணவியை பலாத்காரம் செய்ய முயன்று கொண்டிருந்தார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவியை மீட்டனர். மேலும் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவருக்கு தர்மஅடி கொடுத்து ஆனைமலை போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • வீரகனூர் போலீசார், வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்து வந்த செல்வத்தை, கைது செய்தனர்.
    • போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்வத்தை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே கடந்த 2020-ம் ஆண்டு 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக சேலம் குழந்தைகள் நல ஆணையருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நல அலுவலர், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், சிறுமியை மீட்டு விசாரித்தனர்.

    இது தொடர்பாக வீரகனூர் அருகே ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் செல்வம் (38) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் செல்வத்தை போலீசார் கைது செய்யவில்லை.

    இந்த நிலையில் தற்போது அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையை படித்த நீதிபதி, சிறுமியின் வாக்குமூலம் தெளிவாக இருப்பதால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செல்வத்தை கைது செய்து ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து வீரகனூர் போலீசார், வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்து வந்த செல்வத்தை, செக்கனூர் பொன்னாளி அம்மன் கோவில் அருகில் நேற்று கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்வத்தை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டு தலைமறைவாக இருந்த கார் டிரைவர் தற்போது தான் கைது செய்து இருக்கும் சம்பவம் வீரகனூர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • பாலமுருகன், மாணவியை வீட்டில் இருந்து கடத்தி சென்று, திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
    • தவளக்குப்பத்தில் வாடகை வீட்டில் பாலமுருகனுடன் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை தவளக்குப்பம் பகுதியில் பிளஸ்-2 தேர்வு எழுதி விட்டு, வீட்டில் இருந்த 17 வயது மாணவி கடந்த 3-ந்தேதி மாயமானார்.

    அவரது தாய் அளித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    மாணவியை காதலித்து வந்த டிரைவரான பூரணாங்குப்பம் காமராஜ் நகரை சேர்ந்த புண்ணியக்கோடி மகன் பாலமுருகன் (21). மாணவியை வீட்டில் இருந்து கடத்தி சென்று, திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    தவளக்குப்பத்தில் வாடகை வீட்டில் பாலமுருகனுடன் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.

    குழந்தைகள் திருமண தடை சட்டம், கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.

    ×